kalvikural

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks


TNG.OsPALLIKALVI
GOs
GOTO
FACEBOOK

GOOGLE
SEARCH
BOX

GPF&CPS STATUS
10,12 OLD
QUESTION
PAPERS

MATHS
PUZZLES

CURSIVE
WRITING
SHEETS

LATEST
SOFTWARES
FOR PC

R.L LIST
FORMS
FOR
TEACHERS


Mumbai


"கல்விக்குரல் இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது">அன்பான ஆசிரியர்களே நீங்கள் தயார்செய்த கேள்வித்தாள்கள் மற்றும் உங்களின் படைப்புகளை www.kalvikkural@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பிடுங்கள் நாங்கள் வெளியிடுகிறோம் உங்கள் பெயரில் அனைவருக்கும் பயன்படட்டும் .

SITE VIEWERS


கல்விக்குரலின் புதிய செய்திகள் உங்கள் கைபேசியில் உடனுக்குடன் வரவேண்டுமா? உடனடியாக பதிவு செய்யுங்கள் கீழ்கண்ட அமைப்பில் ON KALVIKURAL SEND SMS TO 9870807070. அல்லது JOIN KVKL SEND SMS TO 9500866614.அல்லது JOIN KALVIKURAL SEND TO 9219592195 அனைத்து கல்வி செய்திகள்,அரசாணைகள் உடனுக்குடன் உங்கள் பார்வைக்கு தெரிவிக்கப்படும் என்பதனை மகிழ்வுடன் தெரிவித்திக்கொள்கிறோம் .

"கல்விக்குரலின் புதிய செய்திகளை EMAIL வழியாக பெற இங்கே பதிவு செய்யுங்கள்"

கணிதத்தை காதலி -இன்று (22.12.2012)உலகின் சிறந்த "கணித மேதைகளில்' ஒருவர் சீனிவாச ராமானுஜன் பிறந்த தினம் . இவரின் கணித அறிவை மக்கள் அறிந்து கொள்ளவும், இளைஞர்களிடம் கணித ஆர்வத்தை வளர்க்கவும், இவரது பிறந்த தினம், தேசிய கணித தினமாக கடைபிடிக்கப்படும் என சென்ற ஆண்டு பிரதமர் மன்மோகன் சிங் அறிவித்தார். நமது வாழ்வில் கணிதத்துக்கு முங்கிய பங்கு உண்டு. அறிவியலுக்கு அன்னையாக இருப்பது கணிதம். உலகின் ஆரம்ப கால கணித வளர்ச்சிக்கு இந்தியா, பல்வேறு பங்களிப்பை செய்துள்ளது. பூஜ்யத்தை உலகுக்கு அறிமுகம் செய்தது இந்தியா தான். ஆரியபட்டாவுக்கு பின், 16ம் நூற்றாண்டில் கணிதத் துறையில் இந்தியா பின்தங்கியது. ராமானுஜன் மூலம் 20ம் நூற்றாண்டில் இந்தியா மீண்டும் சிறந்து விளங்கத் தொடங்கியது. தற்போதைய தலைமுறையினர், கணிதத் துறையில் அதிகளவில் ஈடுபட முன்வர வேண்டும்.
"2012-2013 TEACHERS PANEL PREPARATION"




>> பகுதிநேர எம்.பில் படிப்பு விண்ணப்பிக்க கடைசி தேதி 16.08.2013-ஊக்க ஊதியம் அறிவிப்பால் இந்த ஆண்டு விண்ணப்பிக்கும் ஆசிரியர்களின் எண்ணிக்கை கூடும் :>> சிறப்பாக பணி செய்த அரசு அலுவலர், ஆசிரியர்களுக்கு முதல்வரின் விருதுகள் அறிவிப்பு>> மாணவர்களுக்கு கல்விக்கடன் வழங்க ரூ.60 கோடி! முன்னோடி வங்கி மேலாளர் தகவல்>> தலைமை ஆசிரியர் சாப்பிட்ட 30 நிமிடத்திற்கு பின்னரே சத்துணவை வழங்க வேண்டும்:பள்ளிக் கல்வித்துறை அறிவிப்பு:>> அரசு பள்ளியில் பணிபுரியும் எம்.பில்,பி.எச்.டி முடித்த பட்டதாரி ஆசிரியர்களுக்கான ஊக்க ஊதியம் அரசானை வெளியிட்ட நாள் 18.01.2013 முதல் வழங்கப்படும் -பள்ளிக் கல்வித்துறை அறிவிப்பு:>> பள்ளிக் கல்வித் துறையில் 400 பேர் கருணை அடிப்படையில் நியமனம்>> மாணவர்களிடம் அறிவியல் ஆர்வத்தை தூண்டும் இன்ஸ்பயர் விருதுக்கு விண்ணப்பிக்க அழைப்பு>> இந்த ஆண்டு( 2013-14)தரம் உயர்ந்த மேல்நிலைப்பள்ளிகளில் 1,000 ஆசிரியர் பணியிடம் கவுன்சலிங் மூலம் நியமனம்:>> அரசு பணிகளில் சேர திருநங்கைகளுக்கு தனித்தேர்வு நடத்த அரசுக்கு பரிந்துரை டி.என்.பி.எஸ்.சி. தலைவர் தகவல்>> மைக்ரோ பயாலஜி பட்டம் பெற்றவர்கள் ஆசிரியர் பணியில் சேரும் கனவு தகர்ந்தது>> வேலைவாய்ப்புக்கு 90 லட்சம் பேர் காத்திருப்பு: வேலைவாய்ப்புத் துறை இயக்குனர் தகவல்>>8ஆம் வகுப்பில் 50%மதிப்பெண்கள் பெற்ற 9ஆம் வகுப்பு மாணவர்களுக்கு செப்., 22ல் ஊரக திறனாய்வு தேர்வு-ஆன் லைனில் விண்ணப்பம் >>தலைமை ஆசிரியர் பதவி உயர்வு: விதிகளை திருத்த இயக்குனர் பரிந்துரை >> பணம் கொடுத்து ஏமாற வேண்டாம்- டி.ஆர்.பி., எச்சரிக்கை>> தொடக்கக் கல்வி - உதவி பெறும் பள்ளிகளில் - 23.08.2010 முதல் ஆசிரியர் தகுதித் தேர்வின்றி(TET) நியமனம் செய்யப்பட்டு பணிபுரியும் ஆசிரியர்களின் விவரம் கோரி இயக்குநர் உத்தரவு:>>10 ஆம் வகுப்பு கணிதம் Jun 2013, April 2013 கேள்வித்தாள்கள் 4பக்கங்களில்பதிவிறக்கம் செய்க >>புத்தகப்பை, பாடப்புத்தகம் உள்ளிட்ட பல விலை இன்றி வழங்குவதால் அரசு பள்ளிகளில் முதல் வகுப்பில் 1 லட்சம் மாணவர்கள் அதிகமாக சேர்ந்துள்ளனர்: தொடக்க கல்வி இயக்குனர் தகவல்:>>மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை:>>9 மற்றும் 10-ம் வகுப்புகளுக்கு பாடம் நடத்தும் பட்டதாரி ஆசிரியர்களுக்குபணியிடைப் பயிற்சி: >>
உன்னால் முடியும் தம்பி 

நா முயற்சியில் ஈடுபட்டால் கவலை மறந்து விடும். அப்போது மாறுபட்ட புதிய எண்ணங்கள் மனதில் தலைதூக்கும்; புதிய எண்ணங்கள் வழிகாட்டும். இதில் முக்கியமான காரியம், "மனதை தளர விடக்கூடாது!' என்பது தான். துணிந்தவனின் மனதிற்கு ஆற்றின் ஆழம் முழங்கால் அளவு தான் என்பர். ஆறு மிக ஆழமாக இருந்தாலும் நாம் நீந்திப் போய் விடலாம் என்பது தான் அவர்களது லட்சியமாக இருக்க வேண்டும்.

ஷேக்ஸ்பியர் எழுதுகிறார்: கடலைப் போன்றது தான் வாழ்க்கை. மேடு, பள்ளம் நிறைந்தது. புயல் நெடுநேரம் வீசப் போவதில்லை. இரண்டு மரங்களைக் கீழே தள்ளியவுடன் புயல் தானே நின்று விடும் என்ற எண்ணத்துடன் செயலில் இறங்கினால், நிலைமை மாறும். சமாளிக்க முடியும் என்ற நம்பிக்கையும், துணிவும் ஒருபோதும் நம்மை கைவிடுவதில்லை. வாழ்வில் நல்ல விஷயங்கள் அதிகமா, கெட்ட விஷயங்கள் அதிகமா என்று அமெரிக்காவில் ஒரு ஆய்வு நடத்தினர். நம்மால் சமாளிக்க முடியாத கெட்ட சம்பவங்கள் மற்றும் தோல்விகள் எல்லாம் வாழ்வில் குறைவாகத்தான் இருக்கின்றன என்று கண்டுபிடித்தனர்.

பலர், "வாழ்க்கை நம் கையிலா இருக்கிறது? திடீரென கஷ்டங்களும், தோல்வியும், நஷ்டங்களும், சங்கடங்களும் வாழ்வில் தோன்றுகின்றனவே. இவற்றை நீக்குவதும், போக்குவதும் நம் கையிலா இருக்கிறது?' என்று கேட்பார்.

எந்த கஷ்டம் வந்தாலும் சரி, அடுத்து என்ன செய்யலாம் என்று அமைதியாக யோசித்தோமானால் தெளிவு தென்படும், ஒரு யோசனை தோன்றும். அமைதியாய் இருங்கள், பொறுமையை கடைப்பிடிப்பது நல்லது.

அமெரிக்காவில், என் வழக்கறிஞர், எனக்கு நெருங்கிய நண்பராகவும் இருந்தார். அசாதாரண மனிதர் அவர்!

அவர் பள்ளி மாணவனாக இருந்தபோது பள்ளியின் பஸ்சில் கடைசி வரிசை பெஞ்சில் அமர்ந்திருந்தார். எதிர்பாராத விதமாக பின்னால் வேகமாக வந்த லாரி ஒன்று பஸ்சை மோத அவர் கை, கால் ஊனமுற்றவரானார். அவரால் நடக்க முடியாது; தள்ளுவண்டியில் வைத்துத் தான் தள்ளிக் கொண்டு போவர். விரல்களின் நரம்புகள் பாதிக்கப்பட்ட நிலையில் அவரால் எழுத முடியாது. டைப்பிங் மெஷின் முன் உட்கார்ந்து கொண்டு எழுத்துக்களை அழுத்துவார்.

உடல்குறை பற்றி பேச மாட்டார். எடுக்கிற வழக்குகளில் எல்லாம் ஜெயித்து விடுவார். அவர் தன் குறைபாடுகளைக் கண்டு அழுது புலம்பியதில்லை; பிறரது இரக்கத்தையும் எதிர்பார்க்க மாட்டார். அது தான் வாழ்க்கை. இருப்பதை ஏற்று, மேலே என்ன செய்யலாம் என்று யோசித்தோமானால் வழி பிறக்கும்.

அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் எனக்கு ரசாயனப் பாடம் சொல்லிக் கொடுத்த ஆசிரியர் ஒருவர் காரைக்குடியைச் சேர்ந்தவர். அவருக்கு திக்குவாய் இருந்தது. ஆனால், அவரது திக்கு வாய்ப் பேச்சு எந்த விதத்திலும் அவரது புத்திசாலித்தனத்தையும், தெளிவையும் தடுத்ததில்லை. பல தோல்வியாளர்களது வாழ்க் கையைப் பார்த்தோமானால் எங்கோ அவர்கள் வாழ்க்கை என்ற நூலை தவற விட்டிருப்பது புரியும் அல்லது எங்கோ வாழ்க்கை எனும் நூலை சிக்கலாக்கிக் கொண்டு உதவி செய்ய வந்த மனைவியுடன் கூட வாழ முடியாமல் வாழ்க்கையை ஓட்டுவர்.

மருத்துவர்கள் என்ன கூறுகின்றனர்... "வாழ்வில் சிக்கல்கள் சகஜம், நாம் தான் சிக்கல்களைப் பொறுமையாக உட்கார்ந்து அலசி சிக்கலைப் போக்க முயல வேண்டும்!'

அண்ணாதுரை எழுதுவார்: "நான் மேஜையில் போய் இடித்துக் கொண்டேன்!' என்று சொல்ல மாட்டோம்; "மேஜை இடித்து விட்டது' என்போம்! மேஜைகளுக்கு என்ன கையா, காலா இருக்கிறது நகர்ந்து நம்மை வந்து இடிக்க... என்பார். எல்லாம் நமது மனோபாவக் கோளாறு தான். நாம் பார்க்கும் விதம், காரணம். பயம், பயத்தைத் தான் கொண்டு வரும். இன்றைய அரசியலில் நல்லதைப் பாராட்டுகின்றனரா, இல்லை கெட்டதைத் தோண்டிப் பார்த்து திட்டுகின்றனரா? என்பதை கவனித்தீர்களா? பிறரைத் தாழ்த்துவதன் மூலம் தான் பெரிய மனிதாக ஆகலாம் என நம்பி எதிரியைத் தாழ்த்த முயல்கின்றனர். இது வெற்றி பெறுவதில்லை. நம்மால் முடியும் என்று தன் வேலையை நன்றாக செய்தால், கவனித்தால் இவர்கள் வெற்றி பெறுவர்.

ஏன் இப்படி செய்கின்றனர் என்று கேட்கிறீர்களா? அறிஞர்கள் கூறுகின்றனர்... "எல்லாம் மனோபாவக் கோளாறு தான்! இயற்கையை ஏற்றுக் கொள்ளும் மனப்பக்குவம் இல்லாதது தான்!' என்கின்றனர்.

 
வாழ்வில் தோல்வி ஏற்படுவது சாதாரணம். மனம் தளர்ச்சி அடைவது இயல்பு. அந்தத் தளர்ச்சி அடைந்த காலங்களில் நாம் ஆற, அமர யோசிக்க வேண்டும். அப்போது நமக்குப் புது வழிகள் தென்படும். தோல்வியை சமாளிப்பது எது? சளைக்காத மனம் தான்! தோல்வியை வெற்றிக் கண்டது எது? விடாமுயற்சி தான்!

"தெய்வத்தால் ஆகாது எனினும் முயற்சி தன் மெய்வருத்தக் கூலி தரும்!' என்பார் வள்ளுவர். ஆம், தெய்வத்தால் முடியாதது கூட, முயற்சியால் முடியும். சோர்வு இல்லாமல், முயற்சியில் குறைவு இல்லாமல், மீண்டும், மீண்டும் முயற்சிப்பவர்கள் விதியைக்கூட வெற்றி கொள்ள முடியும் என்றும் சொல்லியிருக்கிறார் வள்ளுவர்.

தோல்வி வந்தபோது நாம் என்ன செய்யலாம்?
 

No comments:

Post a Comment